மகளிர் T20 உலக கோப்பை 2024: அணிகள் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?? முழு விவரம் இதோ?
நடப்பு மகளிர் T20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு பரிசு தொகையாக ரூ.19.6 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்கா அணி ரூ.9.08 கோடியை பரிசாக பெற்றது . அதே சமயம் அரையிறுதியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு தலா ரூ.4.19 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
2 ஆண்டில் மூன்று உலகக்கோப்பை தோல்விகள்.. மீளா துயரில் தென்னாப்பிரிக்கா ரசிகர்கள்!!
மேலும் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் தலா ரூ.5.07 கோடியும் இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு தலா ரூ.1.13 கோடியும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



























