பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்…மகளிர் உரிமை தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தி அரசு அதிரடி உத்தரவு…!!

1
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்...மகளிர் உரிமை தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தி அரசு அதிரடி உத்தரவு...!!
பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்...மகளிர் உரிமை தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தி அரசு அதிரடி உத்தரவு...!!

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்…மகளிர் உரிமை தொகையை ரூ. 2,500 ஆக உயர்த்தி அரசு அதிரடி உத்தரவு…!!

 

புதுச்சேரி மாநிலத்திற்கான 2025 – 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டை அம்மாநில நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். அதில், பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும், புதுச்சேரியில் இதுவரை குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 நிதி உதவி வழங்கப்பட்டு வந்தது. இதனை, உயர்த்தி இனிமேல் மகளிர் உரிமை தொகையாக ரூ. 2,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்…!! தமிழ்நாடு அரசு மார்ச் 14 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு…!! ஏன் தெரியுமா..?

மேலும், புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும், வறுமை கோட்டிற்கு மேல் வாழும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 15 கிலோ அரிசியும், இதுவரை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இனிமேல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 கல்வி உதவி தொகை தமிழ்நாட்டில் வழங்கப்படுவதைப் போல், நடப்பு கல்வியாண்டில் இருந்து புதுச்சேரியிலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Our Instagram for the Latest Updates

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!