List of Prime Ministers of India from 1947-2025 Tamil- Free PDF Download
Who is the Prime Minister?
ஒரு நாட்டின் பிரதமர் அல்லது தலைமை அமைச்சர் என்பவர் அந்நாட்டு அரசின் செயலாக்கத் தலைவர் ஆவார். மேலும், பாராளுமன்றத்தில் மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட தனிநபரே பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்வார். இதை தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கிணைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் நிர்வகிப்பது போன்ற முக்கிய பொறுப்புகளை கை ஆள்வதே பிரதமரின் பணியாகும்.
Prime Minister in India
நாட்டின் மூன்றாவது குடிமகனாக கருதப்படும் பிரதம மந்திரி பதவிக்கு, மக்களவையில் பெரும்பான்மையான இடங்களைக் கொண்ட கட்சியின் தலைவரோ அல்லது பிற அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெற்று மக்களவையின் நம்பிக்கையைப் பெறக்கூடிய நபராகவோ இருக்கும் ஒருவரை இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமராக நியமிக்கிறார். மற்ற அனைத்து அமைச்சர்களும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், இந்தியப் பிரதமராக தேர்தெடுக்கப்படுபவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டியது கட்டாயம். மேலும், ராஜ்யசபா அல்லது மக்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்திருக்க வேண்டும். மேலும், ராஜ்யசபா உறுப்பினராக இருந்தால் 30 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் அல்லது மக்களவை உறுப்பினராக இருந்தால் 25 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இதை தொடர்ந்து, பிரதமர் அணுசக்தி கட்டளை ஆணையம், நிதி ஆயோக், அமைச்சரவையின் நியமனக் குழு, அணுசக்தித் துறை, விண்வெளித் துறை மற்றும் பணியாளர், பொதுமக்கள் ஓய்வூதிய அமைச்சம் போன்ற முக்கிய நிர்வாகத்தின் தலைவர் பதவியும் வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
List Of Static GK Topics – TNPSC/SSC CGL/RRB/ TET Free PDF Download in Tamil
இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, இந்தியாவின் பிரதமர்கள் மற்றும் அவர்கள் பதவி வகித்த காலம் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
List of Prime Ministers of India from 1947-2025
|
பிரதமர்களின் பெயர்கள் |
பதவிக்காலத்தின் தொடக்கம் | பதவிக்காலத்தின் முடிவு | ஆண்டுகள் மற்றும் நாட்களில் கால அளவு |
கட்சி |
| ஜவஹர்லால் நேரு
(1889–1964) |
15 ஆகஸ்ட் 1947 | 27 மே 1964 | 16 ஆண்டுகள், 286 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| குல்சாரிலால் நந்தா
(1898–1998) |
27 மே 1964 | 9 ஜூன் 1964 | 13 நாட்கள் | – |
| லால் பகதூர் சாஸ்திரி
(1904–1966) |
9 ஜூன் 1964 | 11 ஜனவரி 1966 | 1 வருடம், 216 நாட்கள் | – |
| இந்திரா காந்தி
(1917–1984) |
24 ஜனவரி 1966 | 24 மார்ச் 1977 | 11 ஆண்டுகள், 59 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| மொரார்ஜி தேசாய்
(1896–1995) |
24 மார்ச் 1977 | 28 ஜூலை 1979 | 2 ஆண்டுகள், 126 நாட்கள் | ஜனதா கட்சி |
| சரண் சிங்
(1902–1987) |
28 ஜூலை 1979 | 14 ஜனவரி 1980 | 170 நாட்கள் | ஜனதா கட்சி |
| இந்திரா காந்தி
(1917–1984) |
14 ஜனவரி 1980 | 31 அக்டோபர் 1984 | 4 ஆண்டுகள், 291 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| ராஜீவ் காந்தி
(1944–1991) |
31 அக்டோபர் 1984 | 2 டிசம்பர் 1989 | 5 ஆண்டுகள், 32 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| விஸ்வநாத் பிரதாப் சிங்
(1931–2008) |
2 டிசம்பர் 1989 | 10 நவம்பர் 1990 | 343 நாட்கள் | ஜனதா தளம் |
| சந்திர சேகர் (1927–2007) | 10 நவம்பர் 1990 | 21 ஜூன் 1991 | 223 நாட்கள் | சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்ட்ரிய) |
| பி. வி. நரசிம்ம ராவ் (1921–2004) | 21 ஜூன் 1991 | 16 மே 1996 | 4 ஆண்டுகள், 330 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| அடல் பிஹாரி வாஜ்பாய் (1924–2018) | 16 மே 1996 | 1 ஜூன் 1996 | 16 நாட்கள் | பாரதிய ஜனதா கட்சி |
| எச்.டி.தேவ கவுடா | 1 ஜூன் 1996 | 21 ஏப்ரல் 1997 | 324 நாட்கள் | ஜனதா தளம் |
| இந்தர் குமார் குஜ்ரால் (1919–2012) | 21 ஏப்ரல் 1997 | 19 மார்ச் 1998 | 332 நாட்கள் | – |
| அடல் பிஹாரி வாஜ்பாய் (1924–2018) | 19 மார்ச் 1998 | 22 மே 2004 | 6 ஆண்டுகள், 64 நாட்கள் | பாரதிய ஜனதா கட்சி |
| மன்மோகன் சிங் (1932-2024) | 22 மே 2004 | 26 மே 2014 | 10 ஆண்டுகள், 4 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| நரேந்திர மோடி (பிறப்பு 1950) | 26 மே 2014
மே 30, 2019 |
மே 30, 2019
ஜூன் 9, 2024 |
10 ஆண்டுகள், 192 நாட்கள் | பாரதிய ஜனதா கட்சி |
Narendra Modi is named as the current Prime Minister of India.
Indira Gandhi in 1966 to become India’s first female prime minister.
Since 1947, the president has appointed 14 different prime ministers.
According to the Ministry of Home Affairs list, the Prime Minister ranks third after President & Vice President in India.
Jawaharlal Nehru was the first prime minister of India, whose tenure lasted 16 years and 286 days.


























