TN Job “FB
Group” Join Now
சேமிப்பு திட்டம்:
கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா காலம் என்பதால் நாட்டின் பொருளாதாரம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா குறைந்து வந்ததால் அனைத்து தரப்பு தொழில்களும் துவங்கப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியில் இருந்து மீள தொடங்கியது. மேலும் நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்யவதற்கான அனைத்து பணிகளிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு – இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!!
இந்நிலையில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓர் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, வங்கிகளின் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் இன்று முதல் குறைக்கப்படும் என்று அறிவித்தார். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர் கூறியதாவது, வங்கிகளின் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்படும் என்றும் பொது வருங்கால நிதி என்று கூறப்படும் PPF வட்டி 7.1%இருந்து 6.4% ஆக குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் ஓராண்டு கால வைப்புத்தொகைக்கான வட்டியும் 5.5% இருந்து 4.4% ஆக குறைக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது இந்த அறிவிப்பில் இருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பின்வாங்கியுள்ளார். அதன்படி தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது, சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தார். மேலும் பழைய வட்டி விகிதம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Good coverage and precise news.