ஐடி ஊழியர்களுக்கு செக் – முன்னணி நிறுவனத்தின் அதிரடி உத்தரவு!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ தனது ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
விப்ரோ:
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், எச்சிஎல், இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் அண்மையில் தனது ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்யும் படி உத்தரவிட்டது. அந்த வரிசையில் தற்போது விப்ரோ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ஊழியர்கள் வாரத்தில் 3 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வந்து வேலை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகை முடிந்து நவம்பர் 15 ஆம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் ஹைபிரிட் வொர்க் பாலிசி முறையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக போராட்டம் – அரசு ஊழியர்கள் அதிரடி!
இது குறித்த Email – அனைவருக்கும் நவ.16ம் தேதி அனுப்பப்படும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அலுவலகம் வந்து பணிபுரிவதன் வாயிலாக குழு வேலை மேம்படும் ஊழியர்களுக்கிடையான கலந்துரையாடல்கள் மேம்படும் என விப்ரோவின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.