தீபாவளிக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை – கதிகலங்கும் ஊழியர்கள்!!!
தீபாவளி பண்டிகைக்கு பல தனியார் நிறுவனங்களில் ஒரு நாள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
தீபாவளி:
தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் பட்டாசுகள், புத்தாடைகள் வாங்குவது என மக்கள் தற்போது இருந்தே பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஷாப்பிங்காக கூட்டம் அலைமோதி கொண்டிருக்குறது. மேலும், இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி வருவதால் வார இறுதி விடுமுறை போல் இருப்பதாக அரசு மற்றும் தனியார் விடுமுறை ஊழியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
ஐடி ஊழியர்களுக்கு செக் – முன்னணி நிறுவனத்தின் அதிரடி உத்தரவு!
அரசு பள்ளிகளுக்கு திங்கட்கிழமை வழங்கினாலும் ஊழியர்கள் மறுநாளே பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு நாள் விடுமுறைக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து சொந்த ஊருக்கு திரும்புவதால் ஊழியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.