தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா? – ஊழியர்கள் கோரிக்கை!
தமிழகத்தில் உண்மையாகவே பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரையிலும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் காவலர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு தர மறுத்துள்ள நிலையில் ஏன் சட்டமன்ற தேர்தலின் போது மட்டும் வாக்குறுதி வழங்க வேண்டும் என CPS ஒழிப்பு இயக்க மாநில மையம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல் பருவத்தேர்விற்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வது எப்படி? முக்கிய தகவல்!
மேலும், 6,30,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் கட்டாயமாக திமுக ஆட்சி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அனைவரின் எதிர்பார்ப்பும் குக்குநூறாக உடைந்துவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஊழியர்களுக்கு பழையபடி பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என அரசு தெளிவுபடுத்த வேண்டும் என ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.