தமிழகத்தில் முதல் பருவத்தேர்விற்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வது எப்படி? முக்கிய தகவல்!
தமிழகத்தில் முதல் பருவத்தேர்வு செப்.19 ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் நிலையில் ஆசிரியர்கள் எவ்வாறு வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதல் பருவத்தேர்வு:
தமிழகத்தில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்த பருவத்தேர்விற்கான வினாத்தாள் SCERT வல்லுநர் குழுக்கள் மூலமாக தயாரிக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட்டுள்ளதாகவும், நடுநிலைப் பள்ளி சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தேர்வு நடத்தும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பு திட்ட முதலீட்டாளருக்கான ஹாப்பி நியூஸ் – வட்டி விகிதம் உயர்வு!
மேலும், https://exam.tnschools.gov.in என்கிற இணையதளம் மூலமாக மட்டுமே ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தேர்வு நடத்த வேண்டும் எனவும், பள்ளிகளுக்கு நேரடியாக வினாத்தாள்கள் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், தலைமையாசிரியருக்கு வழங்கப்பட்டுள்ள EMIS கணக்கு எண் வழியாக மட்டுமே வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும், இந்த கணக்கு எண்ணில் ஏதேனும் பிழை இருந்தால் பள்ளி ஆசிரியர்களின் EMIS கணக்கு எண்ணை பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், ஏதேனும் பிழை இருந்தால் U-DISE பதிவெண் மற்றும் அதன் பாஸ்வேர்டை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 2 மணி முதல் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும், இந்த வழிமுறைகளை ஆசிரியர்கள் சரியாக பின்பற்றினால் மட்டுமே அடுத்த நாள் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.