மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி.. வழக்கறிஞர் சொன்னதென்ன?? விவரம் உள்ளே!!

0
மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி.. வழக்கறிஞர் சொன்னதென்ன?? விவரம் உள்ளே!!

செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் 471 நாட்கள் சிறை வாழ்க்கைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தற்போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ’15 மாதங்களுக்கு மேலாக வெறும் விசாரணை குற்றவாளியாக இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது’. ‘செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகுவதற்கு எந்த கட்டுப்பாடும், தடையும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். மேலும், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க முதல்வர் தீவிர ஆலோசனை செய்து வருவதாக தி.மு.க வின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!