2 கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தினால் ஆபத்து – WHO எச்சரிக்கை!
இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டால் ஆபத்து நேரிடலாம். 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிகள்:
உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடந்த வருடம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா தற்போது அனைத்து நாடுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. கடந்த வருடம் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கொரோனா பாதிப்பின் உச்சகட்டத்தில் இருந்தது. வளர்ந்த நாடுகளாலும் தொற்றை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏராளமான உயிர்கள் பறிபோனது. உலகம் முழுவதும் மயானங்கள் நிரம்பி வழிந்தது. நாடுகள் அனைத்தையும் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் விளைவாக நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – KYC மோசடி எச்சரிக்கை!
அனைத்து நாடுகளிலும் இரண்டு வித தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இரண்டு டோஸ் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதல் டோஸ் செலுத்திக்கொண்ட தடுப்பூசியை தான் இரண்டாம் முறையும் செலுத்த வேண்டும். இந்த நிலையில் தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே 2 தடுப்பூசிகளையும் கலந்து செலுத்தி கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகி இருக்கிறது.
TN Job “FB
Group” Join Now
இந்த நிலையில் கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. உரிய ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு இரண்டு தடுப்பூசிகளையும் பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் எனவும், இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டால் ஆபத்து நேரிடலாம் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.