பள்ளிகள் திறப்பது எப்போது ? முதல்வர் திட்டவட்ட முடிவு!!!!

0
பள்ளிகள் திறப்பது எப்போது- முதல்வர் திட்டவட்ட முடிவு!!!!
பள்ளிகள் திறப்பது எப்போது- முதல்வர் திட்டவட்ட முடிவு!!!!
பள்ளிகள் திறப்பது எப்போது ? முதல்வர் திட்டவட்ட முடிவு!!!!

கொரோனா நோய் அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு நடப்பு கல்வியாண்டு தொடங்கி 6 மாதம் காலம் முடிவடைந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பது குறித்து இறுதியான பதிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. சூழல் சரியாகாததால், பள்ளிகளைத் திறப்பது தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறப்பது குறித்து இறுதியான முடிவு ஏதும் அரசு வெளியிடாததால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வரும் நிலையில் கேரளா கர்நாடகா அரசுகள் ஜனவரி 4 தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தின் பள்ளிகள் திறப்பது குறித்து இறுதியான முடிவு வெளியிடவில்லை. ஏற்கனவே இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டதின் விளைவாக ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா அதிகம் பரவி வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறத்தால் விளைவு மோசமாக முடியும்.என்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து தயக்கம் நிலவி வருகிறது.

கல்லூரி மாணவர்களுக்கான உதவித்தொகை பெற காலஅவகாசம் நீட்டிப்பு

இதுகுறித்து நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, பள்ளிகள் திறப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது முதல்வர் கொரோனா நோய் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தபட்ட பின்பு தான் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஏற்கனவே பல முறை பள்ளிகள் திறப்பு பற்றி அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்புகள் தெரிவித்த நிலையில் அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை கவனித்து அதற்கேற்ப உத்தரவு பிறப்பிக்கும். தமிழகத்தில் வைரஸ் தொற்றின் நிலை பற்றி மத்திய அரசுக்கு எடுத்துரைக்கப்படும். அனைத்து பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகளின் உடல்நலன் தான் முக்கியம்.படிப்பு இரண்டாம் பட்சம் தான். இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.இவ்வாறாக அவர் கூறினார்.

நிரந்தர கல்லூரி பேராசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகள் தேவை!

மேலும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பில்,” மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று குறைந்தவுடன், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதற்கு அனுமதி கிடைத்தால் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், இதற்கிடையில் மாணவர்களின் நலன் கருதி ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடத்திட்டங்களும், 10 முதல் 12ஆம் வகுப்பு வரை 35 சதவித பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மாணவர்களின் நெருக்கடியை சற்றே குறைத்துள்ளது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!