தீவிரமடையும் பருவமழை..!! வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்..!! நடக்கப்போவது என்ன..?
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்த நிலையில், தற்போது இந்திய வானிலை மையம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்து கீழே விரிவாக காண்போம்.
அதாவது,தென்மேற்கு வங்கக்கடலில் நவம்பர் 5 தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் எனவும், இது நவம்பர் 7 ம் தேதி தமிழகம் நோக்கி இது நகர வாய்ப்பு எனவும், இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு. மேலும் இம்மாதத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு எனவும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா என பிற மாநிலங்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


























