ஈ சாலா கப் நம்தே..!! IPL கோப்பையை வெல்வதே இலக்கு.. கோலி உறுதி..!!
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் IPLன் 18வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாத இறுதி வரை நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, “அடுத்த 3 ஆண்டுகளில் ஒரு முறையாவது IPL பட்டத்தை வெல்வதே இலக்கு” எனவும், பெங்களூர் அணியை தவிர வேறு எந்த அணியிலும் விளையாடுவதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை” என உருக்கமாக தெரிவித்துள்ளார்

























