“விரைவில் தேசிய கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம்…!! “தொழிலதிபர் எலான் மஸ்க் உற்சாகம்…!!

0
"???????? ????? ?????? ???????? ?????????? ????? ????????...!! "?????????? ????? ????? ????????...!!
"விரைவில் தேசிய கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம்...!! "தொழிலதிபர் எலான் மஸ்க் உற்சாகம்...!!

“விரைவில் தேசிய கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம்…!! “தொழிலதிபர் எலான் மஸ்க் உற்சாகம்…!!

அமெரிக்காவின் 47 வது  ஜனாதிபதியாக மீண்டும் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பதவியேற்றார். மேலும், அவர் பதவியேற்பதற்கு முன்  அமெரிக்க பாரம்பரிய முறைப்படி துணை ஜனாதிபதியாக ஜெ.டி வான்ஸ் பதவியேற்றுக் கொண்டார். மேலும், இந்த பதவியேற்பு விழாவில் , அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதேபோல், இந்த நிகழ்ச்சியில்  இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து, அவர் அதிபராக பதவியேற்ற பின், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தனது திட்டம் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி அமெரிக்க தேசிய கொடியை விரைவில் பறக்க விடுவோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “அமெரிக்க கொடியில் உள்ள   நட்சத்திரங்களையும் கோடுகளையும் செவ்வாய் கிரகத்தில் நடுவோம்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டிரம்ப் வெளியிட்ட இந்த தகவலை கேட்ட பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், ‘செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க தேசிய கொடி பறக்க விடுவது என்ற செய்தி உற்சாகம் தருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!