விரைவில் சென்னையில் அமையவிருக்கும் 6 வது நீர்த்தேக்கம்.. அனுமதி கோரி நீர்வளத்துறை விண்ணப்பம்..!!

0

சென்னை அதன் தொடர்ச்சியான தொழில்துறை வளர்ச்சிக்கு பெயர் பெற்றது. எனவே அம்மாநகரத்திற்கு அதிகளவிலான மக்கள் வருகைக்கு வழிவகுக்கிறது. இந்த மக்கள் தொகை அதிகரிப்பினால் அடிப்படையான குடிநீர் தேவையும் உயர்ந்து வருகிறது. மேலும், தற்போதைய சூழலில் சென்னையில் தினசரி 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 350 மில்லியன் லிட்டர் குடிநீர் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் பெறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், சென்னையின் மக்கள் தொகை பெருக்கத்தாலும், பருவநிலை மாற்றத்தாலும் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய நீர்த்தேக்கத்தை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி தற்போது “சென்னையில் மழை வெள்ள நீரை சேமித்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில், கோவளம் அருகே 4375 ஏக்கர் பரப்பில் 2.25 TMC கொள்ளளவில் ரூ.471 கோடியில் 6-வது நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக அரசிடம் நீர்வளத்துறை விண்ணப்பம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!