“என் தலையீட்டால் தான் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது”.. போர் பதற்றம் குறித்து டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு..!!

0
“??? ??????????? ???? ??????? - ?????????? ????????? ???????????????”.. ???? ??????? ???????? ??????? ???????? ??????? ??????..!!
“என் தலையீட்டால் தான் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது”.. போர் பதற்றம் குறித்து டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு..!!

“என் தலையீட்டால் தான் இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது”.. போர் பதற்றம் குறித்து டிரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து இயங்கும் பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, போர் பதற்றத்தை நிறுத்த இரு நாடுகளும் ஒரு வழியாக ஒப்புக்கொண்ட நிலையில், இரு நாடுகளின் ராணுவ இயக்குனர் ஜெனரல்கள், கடந்த மே 12 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இரு தரப்பினரும் தாக்குதல் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வருவது தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு இரு நாடுகளும் சமரசம் அடைத்தனர்.
இந்நிலையில் சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய டிரம்ப், “இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால் தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்” என கூறியுள்ளார். மேலும், “இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!