
IPL பிளே ஆஃப் போட்டியில் ஏற்பட்ட சிக்கல்.. வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல்.. வெளியான திடீர் தகவல்..!!
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் இரு நாடுகளும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதாக அறிவித்தன. இந்நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட IPL போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை BCCI அறிவித்துள்ளது. அதன்படி மீதமுள்ள போட்டிகள் மீண்டும் வரும் மே 17 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று தொடங்கி ஜூன் 3ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “தென்னாப்பிரிக்காவுக்கு WTC இறுதிப் போட்டியும், இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ODI தொடர் இருப்பதாலும் நடப்பாண்டு IPL தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலரும் இருக்க மாட்டார்கள்”என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், “பஞ்சாப் – மார்கோ ஜான்சன், மும்பை – ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், பெங்களூர் – ஜேக்கப் பெத்தேல், லுங்கி நிகிடி, டெல்லி – கார்பின் போஷ், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், ராஜஸ்தான் – ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் குஜராத் – ஜாஸ் பட்லர், ககிசோ ரபாடா” ஆகியோர் IPL தொடரின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.

























