UPSC தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நியமனம்.. வெளியான முக்கிய தகவல்..!!
இந்திய அரசியலமைப்பின் கீழ், மக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் கடமைகளை நிறைவேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்புகளில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒன்றாகும் . இந்த அமைப்பானது இந்திய நிர்வாகப் பணி (IAS), இந்திய வெளியுறவுப் பணி (IFS), இந்திய காவல் பணி (IPS) மற்றும் பிற மத்திய சேவைகள் மற்றும் பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது UPSC அமைப்பில் ஏற்பட்ட புதிய மாற்றம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (UPSC) தலைவராக இருந்த ப்ரீத்தி சுதன் பதவிக்காலம் ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், தற்போது இந்திய பாதுகாப்புத் துறையின் முன்னாள் செயலாளர் அஜய் குமார், UPSC அமைப்பின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, அஜய் குமாரின் நியமனத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அனுமதி அளித்துள்ளார். மேலும், கேரள கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற குடிமைப் பணி அதிகாரியான இவர், 2019 முதல் 2022 வரை பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றி உள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.


























