WhatsApp பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு!

0
WhatsApp பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு - எச்சரிக்கை அறிவிப்பு!
WhatsApp பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு - எச்சரிக்கை அறிவிப்பு!
WhatsApp பயன்படுத்துபவர்களின் கவனத்திற்கு – எச்சரிக்கை அறிவிப்பு!

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகத்தில் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. தற்போது WhatsApp இல் பரவி வரும் அமுல் நிறுவனத்தின் ஆண்டு விழா கொண்டாட்டம் என்பது ஒரு போலியான லிங்க் என இந்திய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கூறுகின்றன.

WhatsApp மோசடி:

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. அதனை பயன்படுத்தி பல மோசடி கும்பல்கள் மோசடி செய்து வருகின்றனர். முந்தைய காலகட்டத்தில் கையில் இருந்த பணம் திருடப்பட்டு வந்தது. தற்போது அனைத்தும் டிஜிட்டல் மாயமானதால் திருட்டும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. தற்போது WhatsApp ல் ஏதாவது முன்னணி நிறுவனத்தின் ஆண்டு விழா கொண்டாடப்படுவதாக லிங்க அனுப்பப்பட்டு வருகிறது. பயனர்கள் அந்த லிங்க் கிளிக் செய்வதன் மூலம் அவர்கள் மொபைல் ஹேக் செய்யப்படுகிறது.

இந்தியாவில் அக்.18 முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் – விமான போக்குவரத்து அமைச்சகம்!

சில நாட்களாக அமுல் நிறுவனத்தின் ஆண்டு விழா கொண்டாடப்படுவதாக லிங்க ஒன்று பரவி வருகிறது. இந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றால் அமுல் எனும் நிறுவனத்தின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதில் இருக்கும் லிங்கை கிளிக் செய்து உள்ளே சொல்லுபவர்கள் வலது பக்கத்தில் உள்ள பெட்டியில் கிளிக் செய்ய வேண்டும் என கூறப்படும். இறுதியில் நீங்கள் 6,000ரூபாய் வென்றதாகவும் அந்த தொகையை பெறுவதற்கு 5 வாட்ஸ் குழுக்கள் அல்லது 20 வாட்ஸ்அப் நண்பர்களுடன் இந்த லிங்கை அனுப்ப வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்படும்.

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – ஒரேயொரு ஓட்டு பெற்று பாஜக வேட்பாளர் படுதோல்வி!

இதை உண்மை போல சித்தரிக்க இந்த பரிசு தொகையை வென்றது போல பலர் அதில் கருத்து தெரிவித்து இருப்பார்கள். அதை நம்பி நண்பர்களுக்கும் பகிர்கின்றனர். ஆனால் உண்மையில் இது ஒரு போலியான லிங்க். இது அனைத்தும் ஹேக்கர் செய்யும் மோசடி வேலைகள். அதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என இந்திய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கூறுகின்றனர். இவ்வாறு ஹேக் செய்பவர்கள் பண மோசடி செய்வது மட்டுமல்லாது, தனிப்பட்ட தகவல்களையும் சேகரிப்பதாக கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!