தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – ஒரேயொரு ஓட்டு பெற்று பாஜக வேட்பாளர் படுதோல்வி!

0
தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - ஒரேயொரு ஓட்டு பெற்று பாஜக வேட்பாளர் படுதோல்வி!
தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் - ஒரேயொரு ஓட்டு பெற்று பாஜக வேட்பாளர் படுதோல்வி!
தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – ஒரேயொரு ஓட்டு பெற்று பாஜக வேட்பாளர் படுதோல்வி!

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல்:

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. பின்னர் கொரோனா காரணமாக தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 15 ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 22 ம் தேதி முடிவு பெற்றது. அதன் பின்னர் அந்த 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

IRCTC பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாதத்தில் 12 டிக்கெட்டுகள் முன்பதிவு!

மேலும் அக்டோபர் 12 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இத்தகைய உள்ளாட்சி தேர்தலுக்கு 9 மாவட்டங்களில் 97,831 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டங்களாக நடந்து முடிந்தது. இன்று அக்டோபர் 12 ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. தேர்தலில் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற 9வது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் கார் சின்னத்தில் போட்டியிட்டார். அவர் தேர்தலில் ஒரே ஒரு வாக்கு பெற்று படுதோல்வி அடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையே 5 அவரையும் சேர்த்தால் 6 என்று இருக்கையில் அவர் ஒரே ஒரு வாக்கு பெற்றுள்ளது மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வி உதவித்தொகை அறிவிப்பு!

மேலும் உறவினர்கள் பலர் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவரது குடும்பத்தாரே அவருக்கு ஓட்டு போடவில்லை என்பது தெரிகிறது. அவர் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா படங்களை வைத்து பிரச்சாரம் செய்துள்ளார். கார்த்திக் இவ்வாறு ஒரே ஒரு வாக்கு பெற்றது சமூக வலைத்தளங்களில் கேலிக்கையாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் அந்த ஒரு ஓட்டும் அவர் போட்டதுதானா? வேறு யாரேனும் தெரியாமல் போட்டனரா? என்றும் கலாய்த்து வருகின்றனர். இதை தொடர்ந்து #ஒத்த_ஓட்டு_ பாஜக, #Single_ Vote_ BJP என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!