IRCTC பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாதத்தில் 12 டிக்கெட்டுகள் முன்பதிவு!

0
IRCTC பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மாதத்தில் 12 டிக்கெட்டுகள் முன்பதிவு!
IRCTC பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - மாதத்தில் 12 டிக்கெட்டுகள் முன்பதிவு!
IRCTC பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாதத்தில் 12 டிக்கெட்டுகள் முன்பதிவு!

IRCTC பயனர்கள் முன்னதாக ஒரு மாதத்தில் ஆறு டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை வழங்கியிருந்தது. தற்போது ஆதார் சரிபார்ப்புடன் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை பயனர்கள் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு சலுகைகள்:

ரயில் பயணத்திற்கானடிக்கெட்டுகளை முன்பதிவு இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் IRCTC என்ற செயலியை உருவாகியுள்ளது. இந்த செயலியின் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு மட்டுமல்லாமல் ரயில்கள் பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. முன்னதாக மாதம் 6 டிக்கெட்டுகள் ஆதார் சரிபார்ப்பு இல்லாமல் IRCTC மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருந்தது.

தமிழகத்தில் 1 முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – கல்வி உதவித்தொகை அறிவிப்பு!

தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி பயனர்கள் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஆனால் அதற்கு குறைந்த பட்சம் ஒரு முறையாவது பயனரின் ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும். இருப்பினும், ஒரு மாதத்தில் ஆதார் இல்லாமல் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியும் நடைமுறையில் உள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி பயனர் ஐடியை ஆதார் மூலம் சரிபார்க்கும் முறை:
  • முதலில் www.irctc.co.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • உள்நுழைவு சான்றுகளை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
  • ‘MY ACCOUNT’ என்ற பிரிவில், ‘ Link Your Aadhaar’ என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
  • இப்பொழுது, ஆதார் கே.ஒய்.சி பக்கம் தோன்றும், அதில் ஆதார் அட்டையின் படி உங்கள் பெயரை உள்ளிடவும், ஆதார் எண் அல்லது மெயில் ஐடியை வழங்க வேண்டும். இப்பொழுது ‘Send OTP’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்கள் ஆதார் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP எண் வரும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • KYC பதில் ஆதாரிலிருந்து பெறப்படுகிறது. ஆதார் சரிபார்ப்பு செயல்முறையை முடிக்க ‘Update’ என்பதனை தேர்வு செய்ய வேண்டும்..
  • இப்பொழுது உறுதியான செய்தி திரையில் தோன்றும். இப்பொழுது அந்த பக்கத்தை மூடி விட்டு, மீண்டும் www.irctc.co.in என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
  • இப்பொழுது MY ACCOUNT பகுதியில் சென்று உங்களது ஆதார் KYC நிலைமையினை சரிபார்க்கலாம்.
ஆதார் மூலம் பயணிகளை சரிபார்க்கும் முறை:
  • IRCTC ன் முகப்பு பக்கத்தில் எனது கணக்கு, சுயவிவரம், முதன்மை பட்டியலைச் சேர்க்கவும்/மாற்றவும் என்ற தேர்வுகளுக்கு வரிசையாக செல்ல வேண்டும்.
  • இப்பொழுது, உங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், படுக்கை விருப்பம், உணவு விருப்பம், மூத்த குடிமகன் சலுகை, அடையாள அட்டை வகை மற்றும் ஆதார் எண் ஆகிய அனைத்து விவரகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்த விவரகளை சமர்ப்பித்த பின்னர், நீங்கள் முதன்மை பயணிகள் முதன்மைப் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். இந்த விவரங்களை சேமிக்கப்பட்ட பயணிகளின் பட்டியலில் காணலாம்.
  • பயணிகளின் ஆதார் சரிபார்ப்பு விவரங்களை சோதிக்க, இப்பொழுது, ‘நிலுவையில் உள்ள ஆதார் சரிபார்ப்பு நிலையை சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்கள் விவரங்கள் சரியாக இருந்தால், சரிபார்ப்பு நிலை சரிபார்க்கப்பட்டது மற்றும் உங்கள் செயல்முறை வெற்றி என்று திரையில் வரும்.
12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான படிகள்:
  • முதலில், www.irctc.co.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு, பயணத்தின் விவரகளை பதிவு செய்து முன்பதிவு பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • நீங்கள் உங்கள் பயணத்திரகன் ரயில் மற்றும் வகுப்பைத் தேர்ந்தெடுத்து, முன்பதிவைத் தொடர வேண்டும்.
  • பயணிகளின் பெயரை பதிவு செய்ய வேண்டிய இடத்தில் காட்டப்படும் பட்டியலில் இருந்து ஆதார் சரிபார்க்கப்பட்ட பயணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு, முதன்மை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து பயணிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பயணிகளின் விவரங்கள் தானாகவே முன்பதிவு படிவத்தில் நிரப்பப்படும்.
  • முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் குறைந்தபட்சம் ஒரு பயணியின் ஆதார் ஆவணமாவது சரிபார்க்கப்பட வேண்டும். மற்ற பயணிகளின் விவரங்களை நீங்களாகவே உள்ளிட வேண்டும்.
  • முன்பதிவு விவரங்களை சரிபார்த்து, அவர்களின் ஆதார் எண்களை சரிபார்க்க வேண்டும்.
  • இப்பொழுது, உங்களுக்கு விருப்பமான கட்டண செயல்முறையை தேர்வு செய்து, முழுமையாக கட்டணம் செலுத்தப்பட்டவுடன் முன்பதிவு உறுதி செய்யப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!