விஜய் டிவி Pandian Stores சீரியல் வீட்டை சுற்றி வளைத்த Vj Chithu ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி Pandian Stores சீரியல் வீட்டை சுற்றி வளைத்த Vj Chithu ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி Pandian Stores சீரியல் வீட்டை சுற்றி வளைத்த Vj Chithu ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி Pandian Stores சீரியல் வீட்டை சுற்றி வளைத்த Vj Chithu ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடித்திருந்த விஜே சித்ரா மறைந்து ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில், அவரது நினைவு தினத்தில் போஸ்டர்களை ஒட்டி ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவிக்க இது தொடர்பான காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜே சித்ரா

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் எக்கச்சக்கமான தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்திருந்த நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிச.9ம் தேதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரையில் அறிமுகமாகி படிப்படியாக முன்னேறி, புகழின் உச்ச காலகட்டத்தில் இருந்த போது திடீரென தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட விஜே சித்ராவின் மரணம் தமிழ் சின்னத்திரை உலகை உலுக்கியிருந்தது.

TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முறையில் அதிரடி மாற்றம்!

முதல் நாள் இரவு வரை ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகை சித்ரா விடியற்காலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தியை இன்று வரையும் அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு சித்ராவின் மறைவு அவரது ரசிகர்களை வெகுவாக பாதித்திருக்கிறது. என்றாலும், நடிகை சித்ரா மறைந்து தற்போது ஒரு வருடம் கடந்திருக்கும் நிலையில், அவரது நினைவு நாளன்று ரசிகர்கள், சக நடிகர், நடிகைகள் பலரும் தங்களது இரங்கல் பதிவை வெளியிட்டு வருத்தத்தை தெரிவித்திருந்தனர்.

இதற்கு ஒரு படி மேலே போய், தன்னை வாழ வைக்கும் ரசிகர்கள் மீது எப்போதும் அளவு கடந்த அன்பு செலுத்தி வரும் நடிகை சித்ராவுக்கு போஸ்டர் ஒட்டியும், சமூக வலைதளங்களில் மீம்களை வெளியிட்டும் அவரை நினைவு கூறும் விதத்தில் ரசிகர்கள் செய்துள்ள செயல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சித்ராவின் ரசிகர்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு நடைபெறும் பகுதி முழுவதும் நடிகை சித்ராவின் புகைப்படம் கொண்ட போஸ்டர்களை ஒட்டி தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதே போல சில ரசிகர்கள் சித்ராவின் வீட்டிற்கு சென்று அவருக்கு பிடித்த சேலை, நகைகள், உணவுகள் ஆகியவற்றை அவரது புகைப்படத்திற்கு முன்பாக வைத்து படையல் செய்து தங்களது வருத்தங்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் அனைத்தும் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வர அந்த காட்சிகள் அத்தனையும் பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!