சர்வதேச கிரிக்கெட்டில் சரித்திர சாதனை படைத்த விராட் கோலி.. வெளியான நியூ அப்டேட்!!
இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் குவிக்க, பங்களாதேஷ் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 2வது இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..|| “மீண்டும் அகவிலைப்படி உயர்கிறது…ஆவலுடன் மக்கள்”..!!
முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் விராட் கோலி இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 23 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சாதனை ஒன்றை படைத்து உள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 12,000 ரன்கள் அடித்த வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். எதிர்வரும் போட்டிகளிலும் இதை பார்மில் விராட் தொடர்வார் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


























