
பாண்டியனை வைத்து யூடியூப் சேனல் நடத்தும் ஐஸ்வர்யா.. கடுப்பில் மூர்த்தி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா பல பிரச்சனைகளுக்கு பின்னரும் திருந்தாமல் இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் வர, கதிர் தனத்தின் நல்ல குணத்தால் கண்ணன் மீண்டும் வீட்டிற்குள் வருகிறார். மூர்த்தி கண்ணனை வீட்டிற்குள் சேர்க்க கூடாது என பயங்கரமாக கோவப்பட்டாலும் தனம் சமாதானப்படுத்தியதால் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் மூர்த்திக்கு ஏற்கனவே ஐஸ்வர்யா யுடியூப் சேனல் நடத்தியது பிடிக்காமல் இருக்கிறது.
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஜூன் 10ல் குறைதீர் முகாம்!
ஆனால் ஐஸ்வர்யா தொடர்ந்து சொல்வதை கேட்காமல் யுடியூப் சேனல் நடத்துகிறார். முதலில் இந்த வீட்டில் மூன்று பேர் மாசமாக இருப்பதை கன்டென்ட் ஆக்க, அதனை தொடர்ந்து பாண்டியனை வைத்து கன்டென்ட் உருவாக்குகிறார். அப்போது முல்லை வந்து ஐஸ்வர்யாவை தடுத்து நிறுத்தி, பல பிரச்சனைகளுக்கு பின் நீங்க இந்த வீட்டிற்கு வந்து இருக்கீங்க, மாமாவை கோவப்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும் என சொல்கிறார். ஆனால் அப்போது ஐஸ்வர்யா முல்லை மீது கோபப்படுகிறார். இப்படியே சென்றால் குடும்பம் என்ன ஆகும் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.