புது வீடு பற்றி கதிரிடம் சொன்ன கண்ணன், கோவப்படும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
புது வீடு பற்றி கதிரிடம் சொன்ன கண்ணன், கோவப்படும் மீனா - இன்றைய
புது வீடு பற்றி கதிரிடம் சொன்ன கண்ணன், கோவப்படும் மீனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
புது வீடு பற்றி கதிரிடம் சொன்ன கண்ணன், கோவப்படும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி புது வீட்டை கட்ட இருப்பது பற்றி கண்ணன் கதிரிடம் சொல்கிறார். பின் பார்வதி அதை கேட்டு கோவப்பட கதிர் அமைதியாக இருக்க சொல்கிறார். பின் மூர்த்தியிடம் தனம் இடம் சரி என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி, கண்ணன் இன்னும் ஏன் சாப்பிட வரவில்லை என கேட்க அப்படி என்ன வேலை செய்கிறான் என கேட்கிறார். பின் ஜீவா கண்ணனிற்கு போன் செய்து பார்க்க ஆனால் கண்ணன் போனை எடுக்காமல் இருக்கிறார். பின் மூர்த்தி தனத்தை அழைக்க கண்ணன் இன்னும் ஏன் வரவில்லை? ஒருவேளை வேலை முடிந்து நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறானா என கேட்க, ஜீவா எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் மூர்த்தி புது இடம் பற்றி என்ன முடிவு செய்தீர்கள் என கேட்க, மூன்றாவதாக பார்த்த இடம் சரியாக வரும் என தனம் சொல்கிறார். நாம 6 மாதத்தில் வீடு கட்டி முடிக்கும் வரை வாங்குபவர் ஒப்புக் கொள்ள வேண்டும் என சொல்ல, உடனே மீனா இப்படி யாரிடமோ கேட்டுக் கொண்டு இருப்பதற்கு என் அப்பா தான் வீட்டை வாங்க பணத்தை தயாராக வைத்திருப்பதாக சொல்கிறார்.

நான் வேண்டும் என்றால் அப்பாவிடம் பேசவா என மீனா கேட்க மூர்த்தி நான் தான் சொன்னேன்ல நெருங்கிய உறவு உடன் கொடுக்கல் வாங்கல் வேண்டாம் என சொல்கிறார். பின் கண்ணன் கதிர் கடைக்கு வர கதிர் சாப்பாடு எப்படி இருந்தது என கேட்கிறார். பின் முல்லையும் நாங்க முதல் முறை அசைவம் செய்திருக்கோம் நன்றாக இருக்கிறதா என கேட்க, கண்ணன் நன்றாக இருந்தது என சொல்கிறார். பின் கண்ணன் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என சொல்ல கதிர், அண்ணன் எதாவது சொல்லுச்சா என கேட்கிறார். கண்ணன், அண்ணன் வீட்டை விற்க முடிவு செய்துள்ளதாக சொல்ல, உடனே கதிர் அண்ணன் ஒப்புக் கொண்டாரா என கேட்கிறார்.

முதலில் வீட்டை இடித்து கட்ட தான் முடிவு செய்தார் ஆனால் அதனால் செலவு அதிகம் ஆகும் என்பதால் வீட்டை விற்றுவிட்டு தள்ளி வேறு ஒரு இடத்தில் புது வீடு கட்ட முடிவு செய்துள்ளதாக சொல்கிறார். மேலும் அம்மா இறந்த பின் வீட்டில் இருக்கவே யாருக்கும் பிடிக்கவில்லை. நீயும் வீட்டை விட்டு சென்றுவிட்டாய் அம்மா நேற்று அண்ணன் கனவில் வந்து வீட்டை விற்றால் எல்லாம் சரியாகிவிடும் என சொன்னதாக சொல்கிறார். அது மட்டுமில்லாமல் ஜீவா அண்ணன் தலையில் ஓடு விழ பார்த்தது நல்லவேளை அண்ணன் தப்பித்துவிட்டார் என கண்ணன் சொல்கிறார்.

உடனே முல்லை அப்பா என்ன இது கஷ்ட காலம் அந்த வீட்டை கட்ட பாண்டியன் எப்படி எல்லாம் கனவு கண்டான் என சொல்கிறார். பின் முல்லையின் அம்மா அந்த வீட்டை விற்பது குறித்து உங்களிடம் சொல்ல வேண்டுமா? வேண்டாமா? அந்த வீட்டில் உங்களுக்கும் சரி பங்கு இருக்கிறது. இதெல்லாம் சரியாக வராது நான் சென்று நியாயத்தை கேட்கிறேன் என பார்வதி கோவமாக கிளம்ப உடனே கதிர் அதெல்லாம் வேண்டாம் நீங்க அமைதியாக இருந்தாலே போதும் என சொல்கிறார். நீங்க சென்று பிரச்சனை செய்யாமல் இருந்தால் போதும் என சொல்ல, உடனே பார்வதி என்னால் பிரச்சனையா என் மகள் தான் உங்களால் கஷ்டப்படுகிறாள் என சொல்கிறார்.

மறுபக்கம் மூர்த்தி இடத்தை பற்றி பேச தனம் அப்போ உடனே பேசுங்கள் என சொல்கிறார். இது பற்றி கதிரிடமும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என தனம் சொல்கிறார். அவனையும் கூட்டிக் கொண்டு சென்று இடத்தை காட்டலாம் என தனம் சொல்கிறார். பின் ஜீவா பேசிக் கொண்டு வர இடம் சரி என சொல்லிவிட்டேன் தேதி சொன்னால் போதும் என சொல்கிறார். பின் தனம் ஜீவாவை கதிரை அழைத்து சென்று இடத்தை காட்டு என சொல்கிறார். நியாயப்படி அவனுக்கும் காட்டுவது தான் சரி என சொல்ல, ஜீவா சரி என சொல்கிறார்.

தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டத்திற்கு 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு – திடீர் அறிவிப்பு!

பின் மீனா மூர்த்தி பேசியதை நினைத்து கோவமாக இருக்கிறார். இவர்களுக்காக நான் சென்று பேசினேன் பாரு என சொல்லி கோபத்துடன் இருக்க, அப்போது ஜீவா வருகிறார். மீனா என் அப்பாவிற்கு ஏன் வீட்டை கொடுக்காமல் இருக்கீங்க என கேட்க. அதை பற்றி பேசாதே என ஜீவா சொல்கிறார். ஏன் என் அப்பா என்ன கடனுக்கா பணம் கொடுக்கிறேன் என சொல்கிறார் தயாராக பணம் வைத்திருக்கிறார். நாம அவரிடம் கொடுத்துவிட்டு பின் நல்ல வீட்டை பார்த்து போகலாம் பணம் போதவில்லை என்றால் அதிகம் வாங்கி கொள்ளலாம் என சொல்ல, ஜீவா இதனால் தான் வேண்டாம் என சொல்வதாக சொல்கிறார்.

இந்த வீட்டிற்காக நான் சென்று என் அப்பாவிடம் பேசினேன் பாரு என் மீது தான் தவறு என மீனா கோபப்படுகிறார். மறுபக்கம் முல்லை கடையில் கணக்கு வழக்கு பார்க்கிறார். அப்போது கதிர் வர இன்னைக்கு என்னமோ லாபம் வந்திருப்பது போல இருப்பதாக சொல்கிறார். முல்லை கணக்கை பார்க்கும் போது கையில் அடிபட்டதாக சொல்கிறார். உடனே கதிர் முல்லைக்கு மருந்து போட்டு விடுகிறார். நீ கஷ்டப்படாமல் வளர்ந்துவிட்டு இப்போ என்னுடன் வந்து கஷ்டப்படுகிறாய் என சொல்கிறார். பின் கணக்கு பற்றி கதிர் கேட்க, லாபம் எதுவும் வரவில்லை. நஷ்டம் தான் வந்துள்ளதாக முல்லை சொல்கிறார். இதற்கெல்லாம் நான் தான் காரணம் என முல்லை சொல்கிறார் .

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!