வீட்டை விட்டு துரத்தப்படும் செந்தில்-மீனா.. அடைக்கலம் கொடுக்கும் முத்துவேல் – “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியல் அப்டேட்!

0
வீட்டை விட்டு துரத்தப்படும் செந்தில்-மீனா.. அடைக்கலம் கொடுக்கும் முத்துவேல் – “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியல் அப்டேட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில், செந்தில்-மீனா கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிக்க, பாண்டியன் அவர்களை வீட்டிற்குள் சேர்ப்பாரா என்பது எல்லாம் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில்-மீனா வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர். அதனால் கோவிலுக்கு சென்று கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். கோவிலில் பாண்டியன் கஷ்டப்பட்டு மூட்டையை தூக்கி கொண்டு வர, உடனே செந்தில்-மீனா ஓடி சென்று ஒளிந்து கொள்கின்றனர். இந்நிலையில் பாண்டியன் ஐயரிடம் பேச, திருட்டு கல்யாணம் நடப்பதாக சொல்கிறார். அப்போது மூர்த்தி அப்பா அம்மாவை எதிர்த்து கல்யாணம் செய்தால் நல்லாவே இருக்கமாட்டார்கள் என சொல்ல, மீனா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

இந்நிலையில் பாண்டியனுக்கு முன்னதாக செந்தில் மீனா ஜோடி வீட்டிற்கு செல்கின்றனர். அங்கே குழலி இவர்களின் காதல் பற்றி வீட்டில் சொல்கிறார். ஆனால், எங்களுக்கு தெரியும் அப்படி எல்லாம் என் மகன் செய்யமாட்டான் என பாண்டியன் மனைவி உறுதியாக கூறுகிறார். அப்போது கார் வருகிறது. அதை பார்த்து செந்தில் அம்மா அதிர்ச்சி அடைய, பாண்டியன் அங்கே வருகிறார். பாண்டியனுக்கு வந்த அவமானத்தை பார்த்து முத்துவேல்-சக்திவேல் சிரிக்கின்றனர். அதனால் அவர் மனம் உடைந்து போக, என்ன முடிவு செய்வார் என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் தெரியும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!