
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்.. இந்த வார பிக்பாஸ் தொகுப்பாளர் யார்? குழப்பத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல் அவர்கள் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகர் கமல்:
தமிழ் சின்னத்திரையில் பலரால் அதிகம் விரும்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அதிகமான மக்கள் விரும்பி பார்க்க முக்கிய காரணம் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நடிகர் கமல் இருப்பதால் தான். அவரை தவிர சிறப்பாக யாராலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு போட்டியாளர்களிடம் அவர் பேசும் விதம் இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் நடிகர் கமல் நடித்த விக்ரம் படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் தன் 234 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படி எப்போதும் பிசியாக இருக்கும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல ப்ரைம் டைம் சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறிய ஹீரோயின் – ரசிகர்கள் ஷாக்!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு கமலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இந்த வாரம் யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் நடிகர் சிம்பு தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.