பாரதி கண்ணம்மா நாயகிக்கு நடந்த விபத்து.. இயக்குனர் வெளியிட்ட ஷாக்கிங் புகைப்படம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், புது கண்ணம்மாவாக களமிறங்கி இருக்கும் நடிகை வினுஷா தேவிக்கு, படப்பிடிப்பின் போது அடிபட்டுள்ளது. அது குறித்த புகைப்படத்தை பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் வெளியிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு காலத்தில் TRPயில் சாதனை படைத்த முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல ட்விஸ்ட்கள் வந்துள்ள நிலையில், தமிழக மக்கள் அனைவரும் பாரதியும் கண்ணம்மாவும் எப்போது சேருவார்கள் என எதிர்பார்த்து இருக்கின்றனர். சீரியல் தொடக்கத்தில் கண்ணம்மாவாக நடிகை ரோஷினி நடித்து வந்தார். சின்னத்திரையில் அவருக்கு முதல் வாய்ப்பாக இருந்தாலும் அவருடைய நடிப்பிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் அவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னதாக சீரியலை விட்டு விலக இருப்பதாக அறிவித்தார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகை வினுஷா தேவி கண்ணம்மாவாக களமிறங்கினார். அவருக்கும் நடிப்பில் இது தான் முதல் வாய்ப்பாக இருந்தாலும் அவரும் தன்னுடைய நடிப்பு திறமையால் சீரியலை தொடர்ந்து டாப் இடத்தில் வைத்து இருக்கிறார். அந்த வகையில் கண்ணம்மாவாக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார் என்பது குறித்து சீரியலின் இயக்குனர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
அதில் கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷாவிற்கு காலில் பயங்கரமாக அடிபட்டு ரத்தம் வருகிறது. அவருக்கு தன்னுடைய புடவையை கிழித்து சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரூபாஸ்ரீ முதலுதவி செய்கிறார். இவ்வளவு கஷ்டப்பட்டு அவர் சீரியலில் நடிக்கும் புகைப்படத்தை, பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கண்ணம்மா ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.