விஜய் டிவி பிக்பாஸ் பிரபலத்தை நேரில் சந்தித்த ஜிபி முத்து – அவரே வெளியிட்ட புகைப்படம்! குவியும் லைக்குகள்!

0
விஜய் டிவி பிக்பாஸ் பிரபலத்தை நேரில் சந்தித்த ஜிபி முத்து - அவரே வெளியிட்ட புகைப்படம்! குவியும் லைக்குகள்!
விஜய் டிவி பிக்பாஸ் பிரபலத்தை நேரில் சந்தித்த ஜிபி முத்து - அவரே வெளியிட்ட புகைப்படம்! குவியும் லைக்குகள்!
விஜய் டிவி பிக்பாஸ் பிரபலத்தை நேரில் சந்தித்த ஜிபி முத்து – அவரே வெளியிட்ட புகைப்படம்! குவியும் லைக்குகள்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களாக களமிறங்கிவர் தான் ஜிபி முத்து. அவர் முதல் வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நடன இயக்குனர் சாந்தி மாஸ்டரை நேரில் சந்தித்து இருக்கிறார். மேலும் அவருடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் போட்டியாளர்கள்:

தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த ஆண்டு ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடி வருகின்றனர். மேலும் போட்டியாளர்களில் ஒருவராக யுடியூப் பிரபலம் ஜிபி முத்து களமிறங்கினார்.

என்னது.. பாக்கியலட்சுமி நாயகி சுசித்ராவிற்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் Family புகைப்படம்!

Exams Daily Mobile App Download

அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரம் மட்டுமே இருந்த நிலையில், தன்னுடைய குழந்தைகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்பதால், நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் தற்போது அவர் படம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் ஜிபி முத்து வெளியேறிய அதே வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று சாந்தி மாஸ்டர் வெளியேறினார். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும் போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை சந்திப்பார்கள். அந்த வகையில் தற்போது நடன இயக்குனர் சாந்தி மாஸ்டரை சந்திக்க ஜிபி முத்து சென்று இருக்கிறார். அங்கே இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் ஜிபி முத்து பகிர்ந்து இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!