கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று (26.05.2025) முதல் விண்ணப்பிக்கலாம்., அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு!!
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் இன்று (மே 26) முதல் ஜூன் 20 மாலை 5 மணி வரை பல்கலை. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் http://www.adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம்.
TNPSC Tamil Ilakkanam Vinai Echam Study Material – Free PDF Download
இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கால்நடை மருத்துவ படிப்பில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் மொத்தமாக 660 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 63 இடங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


























