TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு., OMR விடைத்தாளில் புதிய முறை அறிமுகம்., வெளியான முக்கிய தகவல்!!
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை, TNPSC தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக, லட்சக்கணக்கான தேர்வர்கள் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, இந்த ஆண்டு குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அறிவித்தது.
அதன்படி TNPSC குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 12ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் OMR வினாத்தாள் கடந்த ஜனவரியில் மாற்றப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது புதிய OMR விடைத்தாளின் மாதிரி படிவம் http://www.tnpsc.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும், தேர்வர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பார்த்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.


























