TNPSC Tamil Ilakkanam Vinai Echam Study Material – Free PDF Download
TNPSC தமிழ் தகுதித்தேர்வு – வினையெச்சம்
தமிழ் இலக்கணத்தில் பத்து வகையான எச்சங்கள் உண்டு. அவற்றில் ஒன்று வினையெச்சம் ஆகும். இந்த வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். இது தெரிநிலை வினையெச்சம் மற்றும் குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். மேலும், வினையெச்சச் சொற்கள் பொதுவாக இ அல்லது உ ஆகிய ஓசைகளைக் கொண்டு முடியும். மேலும், ஒரு வினையெச்சத் தொடரில் காலத்தையும் செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
இதை தொடர்ந்து, ஒரு வினையெச்சத் தொடரில் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படுகிறது. இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, வினையெச்ச சொற்கள் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
TNPSC Tamil Ilakkanam Study Materials – Free PDF Download
| பெயரெச்சம் | வினையெச்சம் |
| செய்த பையன் | செய்து முடித்தான் |
| எடுத்த பொருள் | எடுத்துக் கொடுத்தான் |
| சென்ற பொழுது | சென்று வந்தான் |
| ஓடும் வண்டி | ஓடிச் சென்றான் |
| வைத்த பெட்டி | வைத்துப்பார் |
| தூக்கிய வீரன் | தூங்க முடியுமா |
| முடித்த செயல் | முடித்து விட்டாள் |
| நல்ல | படுத்து |
| எறிந்த | பாய்ந்து |
| வீழ்ந்த | கடந்து |
| மாட்டிய | பிடித்து |
| அழைத்த | பார்த்து |
| வந்த | வந்து |
| சென்ற | சென்று |
| கூறிய | கூறி |
| ஓடிய | ஓடி |
| எழுதிய | எழுதி |
| எழுந்த | எழுந்து |
| உண்ட | உண்டு |
| பார்த்த | பார்த்து |
| வென்ற | வென்று |
| கற்ற | கற்று |
| பகிர்ந்த | பகிர்ந்து |
| கொடுத்த | கொடுத்து |
| மொழிந்த | மொழிந்து |
| உணர்ந்த | உணர்ந்து |
| கண்ட | கண்டு |
| சுட்ட | சுட்டு |
| சிரித்த | சிரித்து |
| நினைத்த | நினைத்து |
| பயின்ற | பயின்று |
| தேடிய | தேடி |
| வைத்த | வைத்து |
| தெரிந்த | தெரிந்து |
| கேட்ட | கேட்டு |
| போன | போய் |
| தொட்ட | தொட்டு |
| விழித்த | விழித்து |
| கொன்ற | கொன்று |
| ஆண்ட | ஆண்டு |


























