நாளை முதல் 5 நாட்களுக்கு கொளுத்தப் போகுது வெயில்….ஜாக்கிரதையா இருங்க மக்களே!

0

நாளை முதல் 5 நாட்களுக்கு கொளுத்தப் போகுது வெயில்….ஜாக்கிரதையா இருங்க மக்களே!

கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே தமிழகம் முழுவதும் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்ய தொடங்கியது. இதனால் வெப்பம் குறைந்து குளிர தொடங்கியது. தற்போது கோடை மழை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இன்று அதிகபட்சமாக வேலூரில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

தமிழ்நாட்டில் 10.04.2025 முதல் 14.4.2025 வரை வடமாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் 10.4.2025 முதல் 14.4.2025 வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என்றும் வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி கூறியுள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!