தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

0

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா நடைபெறும் ஏப்ரல் 15ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மே 03 ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

ரேஷன் கார்டு தொலைஞ்சு போய்டுச்சா? இனி கவலையே வேண்டாம்….வீடு தேடி வரும்!

உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என்றும் திருச்சி ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் செய்தி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை விடுமுறை சேர்த்தால் திருச்சி மாவட்டத்திற்கு மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. அதாவது ஏப்ரல் 12, 13 சனி, ஞாயிறு வார விடுமுறையும், ஏப்ரல் 14ம் தேதி திங்கள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டும், ஏப்ரல் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!