ரூ. 2000 பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்..!! தமிழக அரசு அறிவிப்பு..!!
கடந்த சில தினங்களுக்கு முன் உருவான ஃபெஞ்சல் புயலால், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பலத்த காற்றுடன் கன மழை பொழிந்து எங்கும் வெள்ளக்காடாய் காட்சி அளித்தது. இதனால், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக, கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை அடிப்படையில் ரூ 2000 வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது, இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ரேஷன் கார்டு அடிப்படையில் ரூ 2000 வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
























