பழைய 5 ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன்?.. ரிசர்வ் வங்கி சந்தித்த விசித்திரமான சிக்கல்..

0
???? 5 ?????? ????????????? ??????????? ????????? ????.. ??????? ????? ???????? ???????????? ???????..
பழைய 5 ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன்?.. ரிசர்வ் வங்கி சந்தித்த விசித்திரமான சிக்கல்..

பழைய 5 ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன்?.. ரிசர்வ் வங்கி சந்தித்த விசித்திரமான சிக்கல்..

 

ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் சாமானிய மக்கள் மத்தியில் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. மேலும் நாணயங்களை பயன்படுத்தி மோசடி செய்வது மிகவும் கடினம் என்பதால் நாணயங்கள் மிகவும் பாதுகாப்பானது என மக்கள் கருதுகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி பழைய நாணயம் ஒன்றை புழக்கத்தில் இருந்து முழுமையாக விலக்க முடிவு செய்துள்ளது.

அதாவது ரிசர்வ் வங்கி  2007 ஆம் ஆண்டில் ஒரு விசித்திரமான சிக்கலைக் சந்தித்தது. அது என்னவென்றால் நாணயம் மற்றும் ஷேவிங் பிளேடு இரண்டும் ஒரே உலோகத்தால் செய்யப்படும் பொருட்கள். எனவே நாணயங்கள் தயாரிக்க நிறைய உலோகங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த விஷயம் தெரிந்த சிலர் அதை சாதகமாக பயன்படுத்தி, தடிமனான பழைய 5 ரூபாய் நாணயங்களை உருக்கி ரேஸர் பிளேடுகளாக மாற்றி வடிவமைத்து அதை வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்து வணிகம் செய்ய தொடங்கினர்.

RRB ALP Answer Key 2024 Out : பதில் தாள்  பதிவிறக்கும் வழிமுறைகள்  இதோ ..!! 

மேலும் ஒரு 5 ரூபாய் நாணயத்தில் இருந்து 6  பிளேடுகள் வரை தயாரிக்க முடியும் என்பதால் கடத்திச் செல்லப்பட்ட  நாணயங்களை பயன்படுத்தி அங்குள்ள மக்கள் மிகவும் பயனடைந்தனர். இதனால் சந்தையில் 5 ரூபாய் நாணயங்கள் அதிகம் குறைவதை கவனித்த இந்திய  ரிசர்வ் வங்கி புதிய நாணயங்களைக் கொண்டு வர முடிவு செய்து உலோகத்தை மாற்றி முன்பைவிட மெல்லிய 5 ரூபாய் நாணயங்களைக் தயாரித்து   ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!