மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!

2
மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சகம் தகவல்!!
மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் - மத்திய அமைச்சகம் தகவல்!!
மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!

நாடு முழுவதும் உள்ள மாநில அரசாங்கத்தில் கீழ் செயல்படும் காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

காவல்துறை காலிப்பணியிடங்கள்:

பல்வேறு மாநிலங்களின் காவல்துறை பணியிடங்களில் 5.31 லட்சத்துக்கும் அதிகமான பதவிகளும், மத்திய ஆயுத காவல் படைகளில் சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் போன்ற 1.27 லட்சம் பதவிகளும் காலியாக உள்ளன என்று காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குரூப் 1 தேர்வுக்கான புதிய நடைமுறைகள் – TNPSC தலைவர் அறிவிப்பு!!

மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அனுமதிக்கப்பட்ட மொத்த காவல் பணியிடங்கள் எண்ணிக்கை 26,23,225 ஆகும். அதே நேரத்தில் 20,91,488 போலீசார் தற்போது பணியில் உள்ளனர். எனவே, 2020 ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி காவல்துறையில் 5,31,737 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த புள்ளி விவரங்களில் சிவில் போலீஸ், மாவட்ட ஆயுத போலீஸ், சிறப்பு ஆயுத போலீஸ் மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன்ஸ் ஆகியவை அடங்கும். காவல்துறையில் 2,15,504 பெண்கள் தற்போது பணியில் உள்ளனர். இது இந்தியாவின் மொத்த போலீஸ் படையில் 10.30 சதவீதமாகும் என்று உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை விட காவல்துறையில் பெண்களின் பங்களிப்பு 16.05 சதவீதம் அதிகரித்துள்ளது.

மருத்துவ உளவியலில் எம்ஃபில் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் – மருத்துவ கல்வி இயக்குனரகம்!!

மத்திய ஆயுத போலீஸ் படைகளின் (சிஏபிஎஃப்) மொத்த அனுமதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 11,09,511 என்று தகவல்கள் தெரிவிக்கிறது, ஆனால் 2020 ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி 9,82,391 பேர் பணியில் உள்ளனர். இது 1,27,120 காலிப்பணியிடங்கள் உள்ளதை காட்டுகிறது. சிஏபிஎப்பில் மொத்த பெண் காவலர்களின் எண்ணிக்கை 29,249 ஆகும். இது மொத்த எண்ணிக்கையில் 2.98 சதவீதமாகும்.

தரவுகளின்படி, நாட்டில் அனுமதிக்கப்பட்ட காவல் நிலையங்களின் எண்ணிக்கை 16,955 ஆகும். மொத்தம் 2,02,925 வாகனங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச போலீசாரிடம் உள்ளன, தவிர 4,60,220 சி.சி.டி.வி கேமராக்கள் உள்ளன என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது. காவல்துறை பயிற்சிக்காக 2019-20ஆம் ஆண்டில் 1,566.85 கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!