
தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட வாய்ப்பு…. அது யார் தெரியுமா…? முழு விவரம் உள்ளே..!!!
தமிழக ஆளுநராக தற்போது பதவி வகிப்பவர் ஆர்.என்.ரவி. சமீப காலங்களாக இவருக்கும் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக விற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இவரது சொல்லாடல்கள் திராவிடத்திற்கும் தமிழ் இனத்திற்கும் எதிராக உள்ளதாகவும் , இவர் மத்தியில் உள்ள பாஜகவிற்கு கைப்பாகையை செயல்பட்டு சனாதனத்தை ஆதரிப்பதாகவும் பல தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர். இவரது கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சை ஆகும் நிலையில், சமீபத்தில் இவர் தூர்தர்சன் தொலைக்காட்சியின் இந்தி வார நிறைவு விழாவிற்கு சென்ற பொது அங்கு தமிழ்த்தாய் வாழ்த்தில் “திராவிடநல் திருநாடும்” என்ற வார்த்தையை நீக்கப்பட்டு பாடப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், இது ஆளுநரால் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் என்று பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழகத்திற்கு குடியரசு தலைவரால் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழகத்தில் பல தேர்தல்களில் மேலிட பொறுப்பாளராக பணியாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் வி. கே. சிங் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது























