அமெரிக்கா ஹச் 1 பி விசா நடைமுறையில் மாற்றம் – கல்வித்தகுதி, சம்பளம் அடிப்படையில் வழங்க முடிவு!!

0
அமெரிக்கா ஹச் 1 பி விசா நடைமுறையில் மாற்றம் - கல்வித்தகுதி, சம்பளம் அடிப்படையில் வழங்க முடிவு!!
அமெரிக்கா ஹச் 1 பி விசா நடைமுறையில் மாற்றம் - கல்வித்தகுதி, சம்பளம் அடிப்படையில் வழங்க முடிவு!!
அமெரிக்கா ஹச் 1 பி விசா நடைமுறையில் மாற்றம் – கல்வித்தகுதி, சம்பளம் அடிப்படையில் வழங்க முடிவு!!

கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் உள் நாட்டவருக்கு வேலைவாய்ப்பு குறைந்த காரணத்தால், வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹச் 1 பி விசாவிற்கு தடை விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார். தற்போது அந்த நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

விசா நடைமுறை:

அமெரிக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு மார்ச் 31ம் தேதி வரை ஹச் 1 பி விசா வழங்கும் நடைமுறைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார். இதனால் இந்திய ஐடி ஊழியர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். அமெரிக்காவில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை ஹச் 1 பி விசா மூலம் நியமனம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு உள்நாட்டவர்களுக்கு வேலையின்மை பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஆவின் முதுநிலை உதவியாளர் பணி விடைக்குறிப்பு, தேர்வு முடிவுகள் வெளியீடு – வழக்கு முடித்து வைப்பு!!

இதனையடுத்து விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்த டிரம்ப், தடை உத்தரவினை பிறப்பித்தார். அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் அவர்களிடம், ஹச் 1 பி விசா நடைமுறையை தளர்த்த கோரி கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் விசா நடைமுறையில் சில மாற்றங்கள் தற்போது கொண்டு வரப்பட்டு உள்ளன.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!!

அதன்படி ஹச் 1 பி விசா பெற விண்ணப்பித்து உள்ளவரின் கல்வித்தகுதி மற்றும் அவர் பணியாற்ற உள்ள நிறுவனத்தில் வழங்கப்பட உள்ள சம்பளம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட உள்ளதாக அமெரிக்க குடியுரிமை சேவை நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!