அமெரிக்காவை சேர்ந்தவர் முதன்முறைாக போப் ஆண்டவராக தேர்வு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி உடல் நல குறைவால் உயிரிழந்தார். மேலும், போப்பின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அதன் பின்னர் அவரது உடல் ஏப்ரல் 26 ஆம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன.
அதன்படி சிஸ்டைன் ஆலயத்தில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல் குழு சார்பில் நேற்று (08-05-2025) நடைபெற்ற வாக்கெடுப்பில் “அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் என்பவர் புதிய போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் இருந்து தேர்வான முதல் போப்பான 69 வயதான ராபர்ட் “போப் 14 ஆம் லியோ” (Pope Leo XIV) என்ற பெயருடன் அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது”. இதை தொடர்ந்து, புதிய போப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14 ஆம் லியோவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



























