“புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு செயல்படுத்தாது”.. உச்சநீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு..!!
இந்தியாவில் கல்விதுறை என்பது பொதுப்பட்டியலில் கீழ் இயங்கக்கூடிய ஒன்றாகும். எனவே மத்திய அரசு கல்வி கொள்கையில் திருத்தம் கொண்டு வந்தாலும் அதனை மாநிலக்களில் அமல்படுத்தும் உரிமை மாநில அரசிற்கு உண்டு. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு “கஸ்தூரி ரங்கன் கல்வி குழு” மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதன்படி 2020 ஆம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29 ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதனால் 34 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கல்விக்கொள்கை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி அதற்கு எதிரான தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஜி.எஸ் மணி என்ற பாஜக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் மனுதாக்கல் செய்ததை தொடர்ந்து, நீதிபதி ஜெ.பி.பர்திவாலா தலைமையிலான அமர்வில் இன்று (09-05-2025) விசாரணை நடைபெற்றது. அதில் “புதிய கல்விக் கொள்கையை, மாநில அரசு செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல” என கூறி வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.



























