UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Indian Economic Service (IES) and Indian Statistical Service (ISS) Examination 2025 மூலம் காலியாக உள்ள 47 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
Indian Economic Service (IES) and Indian Statistical Service (ISS) Examination மூலம் காலியாக உள்ள 47 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Economic Service (IES) – 12 பணியிடங்கள்
Indian Statistical Service (ISS) – 35 பணியிடங்கள்
கல்வி தகுதி:
Indian Economic Service (IES):
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master degree in Economics / Applied Economics/Business Economics / Econometrics தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Indian Statistical Service (ISS):
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் bachelor’s degree in Statistics / Mathematical Statistics / Applied Statistics / Master’s degree in Statistics / Mathematical Statistics / Applied Statistics தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு UPSC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Examination / Interview / Personality Test / Document Verification / Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.02.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



























