
Today Vegetable Price: “திண்டுக்கல்லில் கணிசமாக குறைந்த காய்கறிகளின் விலை”…!! உடனே தேவையானதை வாங்கிக்கோங்க…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வரத்து அதிகமானதால் காய்கறிகளின் விலையானது கணிசமாக குறைந்துள்ளது. அதாவது, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் குறைந்துள்ளதால் காய்கறிகளின் வரத்து அதிகமாகியுள்ளது. இந்நிலையில், இன்று (13.01.2025) விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சந்தையில் 1 கிலோ தக்காளி 30 ரூபாய் , 1 கிலோ சின்ன வெங்காயம் 70 ரூபாய் , 1 கிலோ பெரிய வெங்காயம் 36 ரூபாய், கத்தரிக்காய் 40 ரூபாய் , முருங்கைக்காய் 120 ரூபாய் , உருளைக்கிழங்கு 36 ரூபாய் , பீட்ரூட் 42 ரூபாய் , முட்டைகோஸ் 24 ரூபாய் , அவரைக்காய் 50 ரூபாய் , கேரட் 50 ரூபாய், பீன்ஸ் 57 ரூபாய் , இஞ்சி 67 ரூபாய் மற்றும் பூண்டு 288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


























