UPSC CSE 2023 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
UPSC CSE 2023 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்கள் இதோ!
UPSC CSE 2023 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு - முழு விவரங்கள் இதோ!
UPSC CSE 2023 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

UPSC என்னும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆணையின் படி, UPSC CSE 2023 முதன்மை தேர்வுக்கான முடிவுகளானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு முடிவுகளை தேர்வர்கள் இப்பதிவின் மூலம் எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்.

UPSC CSE 2023 தேர்வு முடிவுகள்:

UPSC தேர்வாணையத்தால் 2023ம் ஆண்டுக்கான Civil Servies Exam குறித்த அறிவிப்பானது 01.02.2023 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வானது முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் என்று மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. UPSC CSE 2023 முதல்நிலை தேர்வானது 21.02.2023 அன்று நடத்தப்பட்டு முடிவுகளும் 12.06.2023 அன்று வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக UPSC CSE 2023 முதன்மை தேர்வானது 2023 செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிலையில் இத்தேர்வுக்கான முடிவுகளானது இன்று (08.12.2023) https://upsc.gov.in/index.php என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்த UPSC CSE 2023 முதன்மை தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மூன்றாம் நிலையான நேர்காணல் ஆனது Dholpur House, Shahjahan Road, New Delhi-110069 என்ற முகவரியில் உள்ள UPSC ஆணையத்தில் நடைபெறவுள்ளது. இந்த நேர்காணலுக்கான அழைப்பு கடித்தை தேர்வர்கள் UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். இத்தகைய அழைப்பு கடிதத்தை தேர்வர்கள் 09.12.2023 அன்று முதல் 15.12.2023 அன்று வரை மட்டுமே பெற இயலும்.

Download UPSC CSE 2023 Mains Exam Result

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!