UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
UPSC ஆணையம் ஆனது Civil Services தேர்வுக்கு விண்ணப்பிக்க 11.02.2025ம் தேதியே இறுதி நாளாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் UPSC ஆனது போட்டித் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில், UPSC ஆணையம் ஆனது Civil Services தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள 979 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.02.2025ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்கள் 18.02.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் (Correction window) இருந்தால் அதனை 19.02.2025 முதல் 25.02.2025ம் தேதிக்குள் திருத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























