
பேஸ்புக் மெட்டா நிறுவனம் எடுத்த தீடிர் முடிவு.. ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கை விரைவில் தொடங்கும் என அறிவிப்பு..
பேஸ்புக் என்பது மக்கள் தங்களது நண்பர்கள் மற்றும் அவர்களைச் சுற்றி வேலை செய்யும், படிக்கும் மற்றும் வசிக்கும் மற்றவர்களுடன் இணைக்க அல்லது ஆன்லைனில் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைத்தளமாகும். மேலும், பிப்ரவரி 4, 2004 அன்று, மார்க் ஜுக்கர்பெர்க் மூலம் தொடங்கபட்ட இந்த வலைத்தளம் ஆரம்பத்தில் ஹார்வர்ட் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வடிவமைக்கப்பட்ட நிலையில் பின்னர் மேம்படுத்தப்பட்டு உலகளவில் பெரும்பாலான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
அதாவது, “பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் தனது ஊழியர்கள் 3000 பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாளை (11-02-2025) முதல் இந்த பணிநீக்க நடவடிக்கை தொடங்கும் என்ற அதிரடி அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது”.

























