சிவில் சர்விஸ் நேர்முக தேர்வு விண்ணப்பங்கள் நாளை முதல் தொடக்கம்!!

0
சிவில் சர்விஸ் நேர்முக தேர்வு விண்ணப்பங்கள் நாளை முதல் தொடக்கம்!!சிவில் சர்விஸ் நேர்முக தேர்வு விண்ணப்பங்கள் நாளை முதல் தொடக்கம்!!
சிவில் சர்விஸ் நேர்முக தேர்வு விண்ணப்பங்கள் நாளை முதல் தொடக்கம்!!
சிவில் சர்விஸ் நேர்முக தேர்வு விண்ணப்பங்கள் நாளை முதல் தொடக்கம்!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட சிவில் சர்விஸ் மெயின் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள்:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐ.ஆர்.எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2020 ஆம் ஆண்டுக்கான 796 பணியிடங்களுக்கான தேர்வுகள் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடத்தப்பட்டன. இந்த ஆண்டிற்கான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியிடப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 8 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

TN Job “FB  Group” Join Now

இவர்களுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடைபெற்றது அதில் 10,564 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 603 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு ஜனவரி மாதம் 8,9,10,16,17 என 5 நாட்கள் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே இந்த தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் சிவில் சர்விஸ் மெயின் தேர்வுக்கான முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும் – ஆசிரியர் சங்க தலைவர் கோரிக்கை!!

நாடு முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 2047 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அதில் தமிழகத்தில் மட்டும் 153 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முக தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். அவர்கள் நேர்முகத்தேர்வுக்கு விண்ணப்பிக்க www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலமாக மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கா?? – கொரோனா இரண்டாம் அலை விளைவுகள்!!

அவர்களுக்கான நேர்முகத்தேர்வு டெல்லியில் உள்ள UPSC  அலுவலகத்தில் ஏப்ரல் மாதம் முதல் நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணிநியமனம் மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படும் மேலும் அவர்களுக்கான பதவி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!