யுபிஐ விதிகள் அதிரடி மாற்றம்…லிமிட் கூடிருச்சு நண்பா…..!
நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் வியாபார நிமித்தங்களுக்காக யுபிஐ பேமெண்ட் வழிமுறையை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். சிறுது கடைகள் முதல் பெரிய கடைகள் வரை எங்கும் யுபிஐ பேமெண்ட் முறை நடைமுறையில் உள்ளது. இது மக்களுக்கு தொகையை செலுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது யுபிஐ பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கியில் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கணக்கு முடக்கமா? முழு விவரங்களுடன்!
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, யுபிஐ மூலம் நபர் முதல் வணிக பரிவர்த்தனை வரம்பை நிர்ணயிக்க என்சிபிஐ-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பரிவர்த்தனை வரம்பு ரூ.1 லட்சம் ஆகவும், சில சிறப்பு சந்தர்ப்பங்களில் இது ரூ.2 லட்சம், ரூ.5 லட்சமாகவும் இருக்கிறது. என்சிபிஐ-க்கு வரம்பு நிர்ணயிக்கும் அதிகாரம் கிடைத்துள்ளதால், விதிமுறைகள் மாற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் என்சிபிஐ அறிவித்த வரம்பிற்குள் வங்கிகள் தங்கள் உள் வரம்பை நிர்ணயிக்க உரிமை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.























