சுங்கக்கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும்.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்ட புதிய அறிவிப்பு..

0

நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலைகள் திகழ்கின்றன. இவை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிர்வகிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2008 படி, அச்சாலைகளில் பயணிக்கும் மக்களிடம் இருந்து சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த   சுங்கச்சாவடி கட்டணங்கள் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

உக்ரைனுடனான போரை நிறுத்த ரஷ்யா ஒப்புதல்.. அதிபர் புதினுடன், டிரம்ப் நடத்திய தொலைபேசி பேச்சுவார்த்தை வெற்றி..

அதாவது, நேற்று (19-03-2025) பாராளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி “தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்களுக்கு விரைவில் சலுகைகள் வழங்கப்படும் என்றும், நடப்பாண்டுக்கான சுங்கக் கட்டணங்களுக்கு புதிய கொள்கைகள் வகுத்து வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்”. மேலும், தரமான பயன்பாட்டுடன் கூடிய சாலைகளை மக்களுக்கு வழங்கிட நெடுஞ்சாலைகளின் உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு அதிகம் செலவிடுகிறது. எனவே இந்த சுங்கக்கட்டண வசூல் அதிகரிப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!