FD-ல் வெறும் 333 நாள் முதலீட்டுக்கு 8.15% வட்டியா||அசத்தலான திட்டம்..!! முழு தகவலுடன்..!!
தற்போதைய காலகட்டத்தில் மக்களிடையே FIXED DEPOSIT திட்டமானது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், மக்கள் நீண்ட காலத்திற்கு FD-ல் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்குமென்றும், குறுகிய காலத்திற்கு முதலீடு செய்தால் குறைந்த வட்டி கிடைக்குமென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவ்வாறு இல்லாமல் சில வங்கிகள் குறுகிய கால முதலீட்டிற்கே அதிக வட்டிகளை வழங்கி வருகிறது. அதன் விவரங்களை விரிவாக கீழே பார்க்கலாம்.
மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! UPI பரிவர்த்தனையில் சில புதிய மாற்றம்…!! இன்று முதல் தொடக்கம்..!!
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆனது ” யூனியன் சும்வ்ரிதி” என்ற FD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 333 நாட்களுக்கான நிலையான வைப்பு திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடாக ரூ.1000 தொடங்கி அதிகபட்சமாக ரூ.3 கோடி வரை நாம் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 8.15% வரை வட்டி வழங்கப்படுகிறது.
மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! UPI பரிவர்த்தனையில் சில புதிய மாற்றம்…!! இன்று முதல் தொடக்கம்..!!
மேலும், 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பொது மக்களுக்கு 7.4%, சீனியர் சிட்டிசன்களுக்கு 7.9% மற்றும் சூப்பர் சிட்டிசன்களுக்கு 8.15 % வட்டி வழங்கப்படுகிறது. உதாரணமாக, உங்கள் டெர்ம் டெபாசிட்டுக்கான வட்டி கணக்கிடப்பட்டு, காலாண்டுக்கு ஒரு முறை வட்டி கூட்டப்பட்டு, அரையாண்டு இடைவெளியில் முதலீடு தொகையில் வரவு வைக்கப்படும், மேலும், இதன் முதிர்வு காலம் முடிந்ததும் வட்டியோடு முழு தொகையும் வழங்கப்படுகிறது.



























